பொங்கல் விருந்தளிக்க பொங்கி நிற்கும் பேராசிரியர்
கடந்த 12.12.2018ல் தனது செல்வமகன் பார்த்திபனின் இல்வாழ்க்கைக்கு தொடக்கவிழா நடத்திய பண்பாளர் அரசுக்கல்லூரியின் முன்னை முதல்வர் முனைவர் ந.செல்வராசு அவர்கள் தம் இல்லத்தில் நடைபெற்ற இத்திருமணவிழாவின் மகிழ்வினைக் கொண்டாட தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை நம் மன்றத்தின் உறவுகளுடன் எதிர் வரும் 13.1.2019ல் அருண்வாசம் பள்ளியில் நடைபெற இருக்கும் மன்ற மாதப்பொதுக்குழு மற்றும் பொங்கல் விழாவினில் உறவுகளுக்கு பொங்கல் வழங்கி கொண்டாட இருக்கின்றார். அன்னாரின் இவ்வரிய செயலைப்பாராட்டுகிறோம் அன்னாருக்கும் அன்னாரது துணைவியார் மற்றும் குடும்பத்தார்க்கும் நமது நன்றிகளைக்கூறி பாராட்டி மகிழ்கின்றோம். பொங்கட்டும் அவர்தம் எதிர்காலம்! இனிதாய், மகிழ்வாய், வளங்கள் அனைத்தும் வகையாய்பெற்று!
இளந்தாய்க்கொரு இனிய பாராட்டு.
மகப்பேறு நற்பேறாய் அமைய நல்வாழ்த்து!
கடந்த 13.12.2018 அன்று நமது கல்வி அறக்கட்டளை உறுப்பினர் தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள திரு பாலச்சந்திரன் அவர்களின் செல்வமகள் திருமதி சுபாஷினி அவர்களின் வளைக்காப்பு விழா வெகு சிறப்பாக துறையூர் வசந்தஜோதி குறுங்கூடத்தில் நடைபெற்றது. தாய்மைப்பேறு பெற்று தாயாராகப்போகும் திருமதி சுபாஷினி அவர்கள் சிறந்ததொரு மகவை ஈன்றெடுத்து பிறவிப்பயனையும் இல்லறத்தின் பெற்றியையும் பேணிக்காக்க மனம் நிறை வாழ்த்துக்களை கனிவுடன் கூறி மகிழ்கிறது மக்கள் மறுமலர்ச்சி மன்றம். இளந்தாயே நீவிர் நலமுடன் குழந்தையை ஈன்று குலப்பெருமை காக்கும் குணக்குன்றாய் விளங்க வாழ்த்துகிறோம் வாழி நீவிர்.!
2018 ஆம் ஆண்டு நிறைவுப்பகுதியை இனிதாய் மாற்ற ஒரு முதியோர் இல்லத்திற்கு சென்று மனைப் பயன்பொருட்கள் வழங்கி மகிழ்வுற்ற மன்றம். | 18.12.2018 ஏகாதாசி விடுமுறை நாளன்று உறையூர் வாழ் நண்பர் ஜோசஃப் அவர்கள் சேகரித்து வைத்திருந்த அரிசி, சமையல், பயன்பாட்டுப் பொருட்கள், ஆடைகள் ஆகியவற்றை பணிக்கம்பட்டி வளையப்பட்டியில் அமைந்துள்ள காக்கும் கரங்கள் தொண்டு நிறுவனத்திற்கு சென்று அங்கு அடைக்கலம் பெற்றுள்ள முதியோருக்கு அப்பொருட்களை மன்றத்தலைவர் முனைவர் பெ.லோகநாதன் துணைத்தலைவர் திரு பெ.தனபால் மற்றும் மாடுவளர்ந்தான் பாறைதிரு க. மகாராசா நண்பர் ஜோசஃப் ஆகியோர் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் திரு முத்துக்குமார் அவர்களிடம் வழங்கி இல்லம் வாழ் முதியோர்களை நலம் விசாரித்து திரும்பினர்.
சமூக அக்கறை கொண்ட மன்றத்துணைச்செயலாளர்