பெருமுத்தரையர்கள் பெரிது உவந்தளித்த கொடை விழா

பெருமுத்தரையர்கள் பெரிது உவந்தளித்த கொடை விழா


24.12.2019ல் ஆதனக்கோட்டை சென்று மக்கள் மறுமலர்ச்சி மன்றப் பொறுப்பாளர்கள் நமது இனத் தோன்றல் செல்வி ஜெயலட்சுமிக்கு நாசா பயணச் செலவிற்கென்று மன்றத்தின் சார்பில் ரூ. 15,000/- வழங்கினர். அப்பொழுது நமது பொங்கல் விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. 12.01.2020ல் விழாவிற்கு வருகை புரிந்த செல்வி ஜெயலட்சுமிக்கு அவரது நாசா பயணச் செலவிற்கென மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஆசிரியர் மூ.முருகேசன் அவர்கள் ரூ.10,000/-த்தினை கொடையாக அளித்து வாழ்த்தினார். இதனைக் கண்ணுற்ற தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் ஆர்.வி. அவர்கள் அம்மாணவிக்கு ரூ. 25,000/வழங்குவதாக அறிவித்தார். புத்தாண்டில் நம் பள்ளியில் நம் இனத்திற்கு பெருமை சேர்க்க செல்வி ஜெயலட்சுமியை வாழ்த்தி பாராட்டி நிதி உதவி வழங்கியது நம் பள்ளி மாணவர்களுக்கு ஒரு உந்து சக்தியாக திகழும் என்பதில் ஐயம் இல்லை. நாம் செல்வி ஜெயலட்சுமிக்கு உதவ முயற்சிப்பதை கேள்வியுற்ற நம் உறவுகள் சிலர் தங்களாலியன்ற பொருளுதவியினை அளித்தனர் மக்கள் மறுமலர்ச்சி மன்றம் கல்வி அறக்கட்டளையும் தன் பங்கிற்கு ஒரு தொகையை அளித்தது. எல்லமாகச் சேர்த்து ரூபாய் 15,000/-த்தினை நம் மன்றத்தின் பொறுப்பாளர்கள் 24.12.2019 அன்று செல்வி ஜெயலட்சுமியை அன்னாரது ஆதனக்கோட்டை இல்லத்தில் சந்தித்து அன்னாரின் சிறிய தந்தை திரு கண்ணன் மற்றும் பெரியதந்தை ஆகியோர் முன்னிலையில் காசோலையாக வழங்கினர். (ஜனவரி உறவுப்பாலத்தில் படம் வெளியாகி உள்ளது). பயணச்செலவிற்களிக்கப்பட்ட பணமுடிப்பு ரூ. 15,000/- (காசோலை) மக்கள்மறுமலர்ச்சிமன்றம் கல்வி அறக்கட்டளை ரூ. 7250


முனைவர் பெ.லோகநாதன் தலைவர், மக்கள் மறுமலர்ச்சி மன்றம் ரூ. 1000


திரு பெ.தனபால் துணைத்தலைவர், மக்கள் மறுமலர்ச்சி மன்றம் ரூ. 1000


வழக்குரைஞர் க.செல்வராசு பொதுச்செயலாளர் மக்கள் மறுமலர்ச்சி மன்றம் ரூ. 1000


திரு கோ.சற்குணம் செயலாளர், மக்கள் மறுமலர்ச்சி மன்றம் கல்வி அறக்கட்டளை ரூ. 1000


திரு சு.இரவிச்சந்திரன், மேநாள் பொருளாளர் மக்கள் மறுமலர்ச்சி மன்றம் ரூ. 1000


பொறிஞர் பெ.அரவரசன் மேநாள் துணைத்தலைவர் மக்கள் மறுமலர்ச்சி மன்றம் ரூ. 1000


திரு தி.அரங்கநாதன் மேநாள் பொருளாளர் மக்கள் மறுமலர்ச்சி மன்றம் ரூ. 500


திரு பி.பரிமணம் உறுப்பினர் மக்கள் மறுமலர்ச்சி மன்றம் கல்வி அறக்கட்டளை ரூ. 1000


வழக்குரைஞர் முத்தமிழ்செல்வன் புரவலர் மக்கள் மறுமலர்ச்சி மன்றம். ரூ. 250