அருணவசம் பள்ளி மாணவர்களின்அருமையான தொரு பேரணி

துடையூர் அருணவசம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி உலக மனித உரிமைகள் தினத்தையொட்டி 10-12-2019 செவ்வாயன்று சிறப்பானதொரு சிறார்கள் பேரணியினை நடத்தி மக்களுக்கு மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தியுள்ளது..இந்த சிறுவர்கள் பேரணியை சிறு கா ம்பூர் பிட்ச்சா யிஅம்மான் கோவில் திடலில் 10-12-19 அன்று காலை 10.00 மணிக்கு பள்ளியின் தாளாளர் முனைவர் பெ..லோகநாதன் அவர்கள்  தலைமையில் சிறுகாம்பூர் திரு சுவாமிநாதபிள்ளை செங்குடி திரு ஆ .மருதை கேபிள் திரு சண்முகம் திரு வி.முருகன் திரு ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்க திருச்சி ஜே கே சி அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் பேராயர் முனைவர் ஜான் ராஜ்குமார் அவர்கள் பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்தார் .ஜெ.கே.சி அறக்கட்டளையின் மா நி ல சாட்ட ஆலோசகர் வழக்குரைஞர் பா .ரமேஷ் அவர்களும் வழக்குரைஞர் ஜி.ஜெயக்குமார் அவர்களும்வாழ்த்துரை வழங்கினார்கள்..மக்கள் மறுமலர்ச்சி மன்றத்தின் துணை தலைவர்கள் திரு வ..இராமசாமி  திரு பெ.தனபால் மேனாள் பொருளாளர் திரு சு.இரவிச்சந்திரன் துணைச்செயலாளர் திரு அ .முத்திரியன்  திருமணத்தகவல் உதவியாளர் திரு கோவிந்தராஜ் கல்விக் குழு உ று ப்பினர்கள் திரு பெ.சின்னத்தம்பி திரு க.நடராஜன் கல்வி அறக்கட்டளை உறுப்பினர் சீனிவாசநல்லூர் பெருநிலக்கிழார் எஸ்.எம்.சங்கர்  எனப்பலரும் கலந்துகொண்டு விழாவினைசிறப்பித்ததோடு மாணவர்களுக்கு வாழ்த்துக்கூறி உற்சாகப்படுத்தினர்.கைகளில் பதாகைகளை ஏந்தி  மனித உரிமைகள் முழக்கங்களை ஒலித்தவாறு ..பேரணி சிறுகா ம்பூர் கடைவீதி, கிளியநல்லூர் குடித்தெரு கிளியநல்லூர் கீழத்தெரு துடையூர் காமராஜர் சாலை கீழத்தெரு, குடித்தெரு,மேல்பத்து,வழியாக பள்ளி வளாகத்தினை வந்தடைந்தது..பள்ளி முதல்வர் திருமதி சத்யபிரியா ஆசிரியர்கள் திரு  ஆர் ஆனந்தன் ,திருமதியர்  அனுராதா ,கோகிலா, சங்கீதா ஆகியோர் வழி நடத்திச்சென்ற பேரணியினை இனிய நந்தவனம் இதழாசிரியர் திரு சந்திரசேகரன்  அவர்கள் மாணவர்களுக்கு தேநீரும் ரொட்டியும் வழங்கி நிறைவு செய்ததுடன், பேரணி நிறைவுஉ ரையாக மாணவர்களைப்பாராட்டிப்பேசினார்  .திரு வைரவன் திரு கார்த்திக் ஆகியோர் பள்ளி வாகனங்களை பாதுகாப்பாக பேரணி சென்ற வழிகளில் சென்று பேரணிக்கு அழகு சேர்த்தனர்.